Thursday, February 5, 2009

PHP சரங்கள்

வணக்கம் அன்பு வாசகர்களே நேற்று PHP மாறியின் விதிகளை பார்த்தோம் இன்று PHP Strings (சரங்கள்) பற்றி பார்ப்போம் .

String variables are used for values that contains character strings.

String Variables என்பது மாறியை குறிக்கிறது, மாறியனது ஒரு எழுத்தோ , எண்களையோ வைத்திருக்கலாம்.

PHP சரத்தின் எடுத்துக்காட்டு :

<?php
$txt="Hello World";
echo $txt;
?>

இதன் வெளியீடு (Output) : Hello World


ஒரு சில PHP String Functions (சர செயல்கூறுகளை) பார்போம்

strlen() function

இந்த strlen() செயல்கூறு ஒரு சரத்தின்(String) நீளத்தை அளக்கும்.

எடு. கா நிரல்


<?php
echo strlen("Hello world");
?>

இதன் வெளியீடு (Output) : 11

இதில் HELLO WORLD என்ற வாசகத்தில் HELLO(5 வார்த்தைகளை கொண்டது ) World(5 வார்த்தைகளை கொண்டது ) ஆகா மொத்தம் 10 இதன் வெளியீடு (Output) மட்டும் எப்படி 11 என்று வந்தது ? HELLO க்கும் WORLD க்கும் நடுவே ஒரு இடை வெளி இருப்பதால் அதையும் ஒரு எழுத்தாக கணக்கு எடுத்துக்கொள்ளும் .


எப்படி இரு மாறியில் உள்ள வாசகங்களை ஒன்றாக இணைத்து அச்சிடுவது பற்றி பார்ப்போம்.

நாம் Hello World 1234 என்று அச்சிட வேண்டும் அதற்காக எப்படி நிரல் எழுவது ?


<?php
$txt1="Hello World";
$txt2="1234";
echo $txt1 . " " . $txt2;
?>


இதில் $txt1 & $txt2 என்ற இரண்டு மாறியிலும் தகவல்களாக இருக்கின்றன அவையை அப்படியே ஒன்றாக இணைத்து ஒரே வரியில் அச்சிட செய்ய
echi $txt1." ".$txt2 என்று கொடுக்க வேண்டும்.

இங்கே இரண்டு மாறியை இணைத்து அச்சிடுகையில் செய்கையில் புள்ளி . வைத்தால் இரண்டும் ஒன்றாக இணைத்து அச்சிடும் நடுவில் " " என்ற (Double Quotes) இரு மாறிக்கு நடுவில் ஒரு இடைவெளியை ஏற்படுதிக்றது.

இதனால் நமக்கு தேவையான வெளியீடை வர வைக்க முடியும்.

strpos() function


இந்த strpos() செயல்கூறு வாசகத்தில் இருக்கும் சரத்தை தேட அல்லது எழுத்தை கண்டுபிடிக்க உதவும்.


<?php
echo strpos("Hello world!","world");
?>

ஒரு வாசகத்தில் இருக்கும் world என்ற சரத்தின் நிலைப்பாட்டைஅறிந்து கொள்ள strpos() என்ற செய்யற்கூரில் வாசகத்தையும் அதை தொடர்ந்து நடுவில் ஒரு கால் புள்ளி (comma), போட்டு சரத்தையும் கொடுத்தால் அதன் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியும்.

இதன் வெளியீடு : 6

PHP பாடங்கள் தொடரும்....

No comments:

Post a Comment