Wednesday, April 15, 2009

Wamp இலவச வழங்கியல்

அன்பு வாசகர்களுக்கு கடந்த மாதங்களில் ஒரு பதிவும் செய்யவில்லை, இருந்தாலும் வாசகர்களின் எண்னிக்கை அதிகரித்துள்ளது எனவே தொடர்ந்து எழுதலாம் என முடிவு செய்துள்ளேன். அது மட்டும் இல்லாமல் இனிமேல் http://tamilphp.blogspot.com என்ற முகவரியில் இருந்து http://ria.tamiltech.info என்று மாற்றியுள்ளேன்.

சரி இன்று Wamp வழங்கியல் பற்றி பார்ப்போம். நாம் ஏற்கனவே Xampp வழங்கியல் பற்றி பார்த்திருந்தோம் ஆனால் அதை விட சிறந்ததாக இந்த Wamp நிரல் விளங்குகிறது.

இந்த WampServer 2.0g-1 நிரலில் Apache 2.2.11, PHP 5.2.9-1 + PECL, SQLitemanager, MySQL 5.1.32, Phpmyadmin போன்ற நிரல்கள் பொதியாக கொடுக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் ஒரு சொடுக்கில் நிறுவி விடலாம். நிறுவிய பின் start--> Wampserver --> Start Wampserver என்று திறந்தால் போதும். உங்களின் system trayயில் ஒரு புதிய நிரல் ஓடிக்கொண்டிருக்கும் அதை சொடுக்கினால் போதும் உங்களுக்கான தெரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.




இந்த wamp வழங்கியலில் பல வசதிகள் உள்ளன MySQL வேலை செய்ய தனி (Console) முனையம், நீங்கள் programmil ராஜா என்றால் இந்த நிரலை உங்களுக்கு தகுந்த மாதிரி மாற்றிக் கொள்ளலாம்.

இந்த நிரலை தரவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள முகவிரியை சொடுக்கவும்.

http://www.wampserver.com/en/download.php

No comments:

Post a Comment