Wednesday, April 15, 2009

தகவல்தளம் பயன்களும் MySQLலின் தேவையும்

Database என்று சொல்லப்படும் தகவல்தளத்தின் மூலமாக ஒரு தகவலை பதிவு செய்து அதை மீண்டும் நம் தேவைக்கு ஏற்ப சேமித்த தகவலை மீண்டும் தேடி நாம் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.



MySQL Database : பொதுவாக பல்வேறு தகவல்தளங்கள் கிடைக்கின்றன ஆனால் ஏன் MySQL தகவல்தளத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்ற ஒரு கேள்வி உங்களுக்குள்ளே தோன்றும். இதோ அதற்கான பதில்கள்

  • MySQL தகவல்தளம் ஒரு திறந்தவெளி ஆதாரம்(Open Source).
  • MySQL தகவல்தளம் RDBMS (Relational Database Management System) வகையை சார்ந்தது.
  • PHP நிரல் MySQLக்கு தேவையான native codesஐ வைத்துள்ளது, அதனால் நாம் MySQL தகவல்தளத்தை PHP coding மூலமாக எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.
  • ஆனால் வேறு தகவல்தளத்தில் இருந்து எ.டுகா oracle தகவல்தளத்திலிருந்து Java அல்லது .NET நிரலுக்கு இணைக்கும் போது ODBC standard மூலமாக தான் இணைக்க முடியும்.
  • ஆனால் PHP நிரலில் முன்பே MySQL க்கு தேவையான native codeஐ நிறுவியுள்ளனர் இதனால் PHPயில் இருந்து MySQL ஐ இணைக்கும் வழி சுலபமாக இருக்கிறது.
  • அது மட்டும் இல்லாமல் MySQL மிகவும் வேகமாக ஒரு தகவலை தேடி தருகிறது.

2 comments:

  1. தொடருங்கள் நண்பரே

    ReplyDelete
  2. உங்கள் விருப்பம் எங்கள் சேவை :)

    ReplyDelete