Thursday, April 16, 2009

MySQL - அடிநிலை SQL Queries பாகம் -1

போன பதிவில் MySQL பற்றி பார்த்தோம், இந்த பதிவில் MySQL அடிநிலை queries பற்றி பார்ப்போம். நீங்கள் Wamp server நிறுவியிருந்தால் இதை இயக்குவது சுலபம் start--> Wampserver --> Start Wampserver என்று திறந்தால் போதும். உங்களின் system trayயில் ஒரு புதிய நிரல் ஓடிக்கொண்டிருக்கும் அதை சொடுக்கினால் போதும் உங்களுக்கான MySQL முனயத்தை (console) தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.



உள்ளிருப்பால் (By Default) MySQL user name : root Password is set to blank, MySQL முனையத்தை திறந்தவுடன் கடவுச் சொல் (password ) கேட்க்கும் அனால் நீங்கள் Enter keyயை அழுத்தி உள்ளே செல்லலாம் ஏன் என்றால் Password is set to blank.

இனி நாம் நேரடியாக MySQL queriesக்கு செல்வோம்.

எல்லா தகவல்தளங்களையும் ஒரே queryயில் பார்க்க :


mysql> SHOW DATABASES;
+--------------------+
| Database |
+--------------------+
| information_schema |
| mysql |
+--------------------+
2 rows in set (0.00 sec)



இதில் information_schema மற்றும் mysql தகவல்தளங்கள் MySQLக்கு தேவையானவை (சுருக்கமாக system file).

புதிய தக்வல்தளத்தை உருவாக்க :


mysql> CREATE DATABASE KARTHIK;
Query OK, 1 row affected (0.00 sec)


உருவாக்கிய தகவல்தளத்தை பயன்படுத்த


mysql> USE KARTHIK;
Database changed


தகவல்தளத்தில் ஒரு tableஐ உருவாக்க

mysql> CREATE TABLE INFO(ID INT, NAME VARCHAR(30), AGE INT, DEPT VARCHAR(30));
Query OK, 0 rows affected (0.20 sec)


குறிப்பு: உங்களுக்கு தகவல்தளத்தில் உள்ள SQL அடிநிலை பற்றி தெரிந்து கொள்ள http://tamilsql.blogspot.com பார்க்கவும்.

உருவாக்கிய tableலில் தகவலை நிரப்ப

mysql> INSERT INTO INFO VALUES(1,"KARTHIKEYAN",23,"INTERNET");
Query OK, 1 row affected (0.03 sec)


tableலில் உள்ள அனைத்து தகவலையும் பெற



mysql> SELECT * FROM INFO;
+------+-------------+------+----------+
| ID | NAME | AGE | DEPT |
+------+-------------+------+----------+
| 1 | KARTHIKEYAN | 23 | INTERNET |
+------+-------------+------+----------+
1 row in set (0.03 sec)



ஏற்றிய தகவலில் ஒரு DEPTல் உள்ள தகவலை மாற்ற


mysql> UPDATE INFO SET DEPT="TECHNOLOGY" WHERE ID=1;
Query OK, 0 rows affected (0.00 sec)
Rows matched: 1 Changed: 0 Warnings: 0


மாற்றிய தகவலை இங்கு பார்போம்


mysql> SELECT * FROM INFO;
+------+-------------+------+------------+
| ID | NAME | AGE | DEPT |
+------+-------------+------+------------+
| 1 | KARTHIKEYAN | 23 | TECHNOLOGY |
+------+-------------+------+------------+
1 row in set (0.00 sec)


தகவல்தளத்தின் கட்டமைப்பை மாற்ற (adding extra field in a table)


mysql> ALTER TABLE INFO ADD EXP INT;
Query OK, 1 row affected (0.19 sec)
Records: 1 Duplicates: 0 Warnings: 0


தகவல்தளத்தின் கட்டமைப்பை மாற்றிய பின்

mysql> SELECT * FROM INFO;
+------+-------------+------+------------+------+
| ID | NAME | AGE | DEPT | EXP |
+------+-------------+------+------------+------+
| 1 | KARTHIKEYAN | 23 | TECHNOLOGY | NULL |
+------+-------------+------+------------+------+
1 row in set (0.00 sec)

3 comments:

  1. தொடர்ந்து வெளியிடவும். பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  2. very very useful blog.. i just shared it with my gmail friends list.. thanks


    anushka shetty

    ReplyDelete
  3. தொடர்ந்து வெளியிடவும்.

    ReplyDelete