முதலில் PHP என்றால் என்ன ?
PHP = Personal Home Page என்று முதலில் இருந்தது இப்பொழுது அதை (Hyper text Pre-processor) என்று மாற்றி விட்டார்கள்.
இந்த Hyper text Pre-processor என்றால் என்ன ?
இந்த வார்த்தையை நன்கு படித்தால் புரியும், Hyper text பெரும்பாலும் நாம் இணைய உலாவி பயன்படுத்தும் பொது நீங்கள் உங்கள் உரல் உற்று பார்த்தால் அங்கு HTTP:// என்று முகவரிக்கு முன்னால் இருக்கும்.
HTTP: HYPER TEXT TRANSFER PROTOCOL என்று அழைப்பார்கள்.
சரி இந்த HTTP க்கும் Hyper text Pre-processor க்கும் என்ன சம்பந்தம் ?
HTTP : இந்த protocol packets ஐ text வடிவத்தில் அனுப்புகிறது.
Hyper Text Pre-Processor அந்த text வடிவத்தை உருவாக்குகிறது (HTML STREAM), கீழே உள்ள படத்தை பாருங்கள்.

இதில் முதலில் எழுதிய HTML program நேரடியாக client க்கு HTML Stream ஐ அனுப்புகிறது ஆனால் PHP code (சிவப்பு நிறத்தில் இருப்பது) மட்டும் PHP engine க்கு சென்று பிறகு HTML Stream மகா Client (பயனாளருக்கு) அனுபப்படுகிறது.
நேற்று சொன்ன xampp பொதியை install செய்து இருந்தால் இன்றைக்கு அதை எப்படி உபயோகிப்பது பற்றி பார்ப்போம்.
நீங்கள் install செய்த folder க்குள் htdocs என்ற ஒரு folder இருக்கும் (எடு. கா : D:\server\htdocs)
இங்கே ஒரு புதிய file Notepad மூலமாக open பண்ணவும் சேமிக்கையில் extension .php என்று சேமிக்கவும் .
(எடு . கா )
first-run.php

பெரிதாக படத்தை பாக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.
சேமித்த first-run.php என்ற கோப்பை notepad மூலமாக திறக்கவும்.
அங்கு கீழே உள்ள code அப்படியே பார்த்து type பண்ணவும், பிறகு சேமிக்கவும்.
பிறகு உங்கள் xampp செர்வரை இயக்கவும் , இன்ஸ்டால் செய்த இடத்தில் Xampp-control என்ற file இருக்கும் அல்லது desktop ல் xampp-control icon இருக்கும் open செய்து கீழே உள்ள படத்தை பாருங்கள் .

Apache மற்றும் mysql ஐ start பண்ணவும்.
பிறகு உங்கள் இணைய உலாவியில் http://localhost/first-run.php என்று இந்த URL ஐ type செய்யவும் .
கீழே உள்ள படத்தை போல் உங்களுக்கு உலாவியில் வரும்.

உங்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தால் http://localhost சென்று Xampp-control panel சுத்தி பார்க்கவும்.
அடுத்த பதிவில் PHP பாடங்கள் தொடரும் ....
மிகவும் பயனுள்ளதாகவுள்ளது, தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeletegreat
ReplyDeleteசூப்பருங்க...
ReplyDeleteDear Kartikeyan,
ReplyDeleteExtremetly very useful article because i dont have nay background with any language, but i like to learn ...
anyhow as you told,i followed up your procedures after save first-run.php file, i opend XAMPP contorlpanal, while press apache but/My sql but, it was quickly disconnect within 2 0r 3 sec.. so i can not check via browsing that file.
please describe me what is the problem if you have free just email me asfar_m@msn.com
Advanced thanks for your work..
www.asfar.20m.com
very thanks
ReplyDeleteமிகவும் பயனுள்ளதாகவுள்ளது
ReplyDelete