Sunday, February 1, 2009

வெப்சர்வர் மற்றும் PHP யின் தேவை

வணக்கம் அன்பு வாசகர்களே, புதிய முயற்சியாக நண்பர் தமிழ்நெஞ்சம் செய்த தமிழ் SQL போல் நானும் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த தமிழ் PHP என்ற வலைப்பூவை திறந்துள்ளேன்.

சரி வாங்க பாடத்துக்கு போவோம்.

Yahoo ! இண்றைக்கு யாஹூ ஒரு பெரிய நிறுவனம் ஆரம்ப காலத்தில் எப்படி அவர்கள் தளத்தை உருவாகினார்கள் ?

ஆரம்பகாலத்தில் HTML என்று சொல்லப்படும் language மட்டுமே பயன்படுத்தி யாஹூ தன் தளத்தை வடிவமைத்தது ஆனால் அந்த தளத்தை யார் வேண்டுமானாலும் edit செய்து கொள்ளலாம் என்ற நிலைப்பாடு இருந்தது .

பிறகு பல language கள் வந்தன PERL, CGI போன்ற மொழிகள் வந்தன ஆனால் இந்த மொழிகள் மிகவும் கடினமாக இருப்பதாக ஒரு கருத்து .

கடைசியில் PHP என்ற மொழியை கண்டுபிடித்தார்கள் . (PHP யின் முழு வரலாறு பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் )

PHP started life and is still primarily used as a server-side HTML-embedded scripting language.

PHP என்பது வழங்கியல் (server) வழி HTML லில் உள்ளே செலுத்தும் விரிவுரை செய்யப்பட்ட மொழி.

சரி இந்த PHP எப்படி வேலை செய்கிறது ?

உங்களுக்கு HTML மொழி மற்றும் C Language தெரிந்தால் போதும் சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

HTML மொழி எப்படி வேலை செய்கிறது ?


படத்தில் காணப்படுவதை போல HTML code எழுதினால் நீங்கள் எந்த கணினியிலும் ஒரு HTML கோப்பை திறக்கலாம், output பாக்கலாம், edit செய்யலாம்.

ஆனால் PHP அப்படி இல்லை இதற்க்கு PHP என்ஜின் என்று சொலப்படும் ஒரு மென்பொருள் (சுருக்கமாக apache + PHP engine வெப்சர்வர் தேவை )



இப்பொழுது உங்களிடம் ஒரு PHP file இருந்தால் அதை சாதரணமாக திறந்தால் வேலை செய்யது இதற்கு பல குழுமங்கள் இதற்கென சர்வர் side மென்பொருளை தருகின்றன, எனக்கு மிகவும் பிடித்த xampp என்று சொல்லப்படும் இலவச பொதி(package) இறக்கம் செய்து install செய்து கொள்ளுங்கள் இந்த வெப்சர்வர் பொதியில்(Package) PHP, MySQL, PERL, FTP, Apache போன்ற மென்பொருள்கள் அடங்கும்.

கீழே உள்ள சுட்டியில் சென்று இறக்கம் செய்து கொள்ளுங்கள் பெரும்பாலும் எல்லா வகையான இயங்குதளங்களுக்கு கிடைக்கும்.

http://www.apachefriends.org/en/xampp.html

11 comments:

  1. நீங்களும் பட்டையை கிளப்புங்க.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தொடர்ந்து எழுதவும். நன்றி.

    ReplyDelete
  3. Lovely Stuff. But still i prefer the old PHP Triad installation! Xamp innum try pannavillai. muthgalil.. padikkiren! Thanks for taking up this project.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் Karthikeyan...!

    ReplyDelete
  5. ya thanks to u to start such a informative blog...

    ReplyDelete
  6. மிகவும் அருமை!
    WAMP is very easy & no config.

    ReplyDelete
  7. hai,i m meena.
    Really its a good work,its helpfull for everyone.
    when i download ur page,after
    i opens its look like box box structure
    and some english alphabets only.what can i do? plz help me.
    also plz tell me which type tamil font support ur page.tell me that link to download.

    ReplyDelete
  8. அருமை நண்பரே...இன்று தான் உங்கள் பக்கத்தை பார்க்க நேர்ந்தது...மிகவும் உபயோகமான தகவல்கள்...!! நன்றி. வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete